கி.மு., கி.பி. - பொ.யு.மு., பொ.யு. : குழப்பம் தீர்க்கும் கட்டுரை

  தமிழக வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் ஆண்டுகளைக் குறிப்பிடும்போது கி.மு., கி.பி., என்று முன்னொட்டுக்குப் பதிலாக பொ.யு.மு., பொ.யு. என்று திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ‘இந்த மாற்றம் குறித்து இதுவரைக்கும் எந்த புகார்களும்

மேலும்

விவசாயிகளின் சோகம் சொன்ன கவிமணி

நான்கு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் இல்லை. ஆனால் வயலுக்கான செலவுகளோ அதிகம். அடைமழையால் ஓராண்டு விளைச்சல் எல்லாம் அழிந்து போனது. அடுத்த ஆண்டு வெயிலின் கொடுமையால் பயிர்கள் எல்லாம் கருகிப் போயின. சென்ற ஆண்டு பெயருக்கு விளைந்தது. போதுமான பொலி (விளைச்சல்) காணவில்லை. கொக்கு என்னும் கொடிய நோய் பயிர்களில் பரவி, எங்கள் குடியைக் கெடுத்தது. இந்த

மேலும்

நாழி..!

 'உண்பது நாழி; உடுப்பவை இரண்டே'இது புறநானூறுப் பாடலில் வரும் ஒரு வரி (புறநானூறு - 189) இதன் பொருள், 'யாராய் இருந்தால் என்ன? அவர் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம்?' என்பதாகும்.@Image@'நல்ல நாளிலே நாழிப்பால் கறக்காத மாடா ஆகாத,

மேலும்

பாடப் புத்தகங்கள்தான் என்னை மிகவும் பாதித்தன - அசோகமித்திரன்

 “உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் எவை?” என்று ஓர் எழுத்தாளரிடம் கேள்வி கேட்டார் நிருபர். 'தான் படித்த கதைகளில் இருந்து எதையாவது சொல்வார்' என்று எதிர்பார்த்தார் நிருபர். ஆனால் எழுத்தாளரோ ''என் பாடப் புத்தகங்கள்தான் என்னை மிகவும் பாதித்தன'' என பதில் சொன்னார். @Image@இப்படி பள்ளிக்கூட பாடப் புத்தகங்களால் மிகவும்

மேலும்

நாட்குறிப்பில் கிடைத்த வரலாறு!

 பதினெட்டாம் நூற்றாண்டு நிகழ்வுகளை அறிந்துகொள்ள, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளைப் படித்தால் போதும்! அந்த அளவுக்கு அவற்றை வரலாற்றுப்பூர்வமாக எழுதி வைத்துள்ளார். தமிழ்மொழிதவிர இதர மொழிகளையும் அறிந்தவர். அதனால், புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள் இவரை, திவானாக அமர்த்திக் கொண்டனர். ஜோதிடவியல், வானவியல் மட்டுமன்றி

மேலும்

விருத்தப்பாக்களால் அமைந்த முதல் காப்பியம்

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி.ஐம்பெரும் காப்பியங்களில் முழுமையாகக் கிடைத்தவை மூன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணிவிருத்தப்பா என்னும் பா வகையால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணிவடமொழியில் உள்ள சீவகன் என்னும் அரசனின் கதையைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல்.சிந்தாமணி

மேலும்

இந்தியாவின் கரிசக்காட்டுப்பூ - கமலா தாஸ்

 “இந்தியாவின் கரிசக்காட்டுப்பூ” என்றழைக்கப்பட்ட பெண் எழுத்தாளர் யார் தெரியுமா என்று வழக்கம்போல நேற்றைய உரையாடலுக்கான தலைப்பை அப்படி முன்னால் தூக்கிப் போட்டார் நண்பர் பாஸ்கர்.“கமலா தாஸ் தானே?” என்றேன் நான்.“பரவாயில்லையே மலையாள இலக்கியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே” என்றார் அவர்.“அடைமொழியில் இருக்கிற கரிசல்

மேலும்

கோவில் ஒழுகு - வரலாற்று நூல்!

அக்கால வேந்தர்கள், கோவில்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்வதில் என்றுமே ஓய்ந்ததில்லை. மன்னர்கள் கொடுத்ததாலேயே இன்று நாடெங்கும் இவ்வளவு பெரும் ஆலகயங்கள், வரலாற்றின் மிச்சமாக விளங்குகின்றன.திருவரங்கம் கோவில் தலவரலாற்றை விளக்குவது ‘கோவில் ஒழுகு’ என்னும் நூல். அதில், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், அக்கோவிலுக்கு

மேலும்

பாரி மகளிருக்கு மணமுடித்த ஒளவை!

பாரி வள்ளல் போரில் இறந்து விட்டான். அவனது இரண்டு மகள்கள் அங்கவை, சங்கவை இருவரும் ஆதரவில்லாமல் நிற்கிறார்கள். பாரியின் நண்பரான கபிலர், அவ்விரு பெண்களுக்கும் திருமணம் செய்துவைக்க முயற்சி எடுக்கிறார். அதற்காக விச்சிக்கோ என்னும் அரசனை நாடுகிறார்.பலாக்கனி உண்ட, கரிய விரல்களை உடைய ஆண் குரங்கு (கடுவன்), தன் மந்தியுடன் (பெண் குரங்கு)

மேலும்

இத்தாலி அளித்த தமிழ்க்கொடை ‘வீரமாமுனிவர்’

 இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க மறையாளர் கான்ஸ்டாண்டின் நோபள் பெஸ்கி. தமிழ் மொழியை நேசித்துச் செம்மைப் படுத்த உழைத்தவர்களுள் முக்கியத்துவம் வாய்ந்த இவர் தன் பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டவர். கத்தோலிக்க மறையைத் பரப்புவதற்காகக் கி.பி1700ம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வருகைதந்த இவர், இம்மொழியின் மீது கொண்ட ஈர்ப்பினால்

மேலும்

யார் இந்த பா.வே.மாணிக்க நாயக்கர்?

  தமிழ்நாட்டில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் பா.வே.மாணிக்க நாயக்கர். சென்னை பொறியியல் கல்லூரியில் பொறியாளர் பட்டம்பெற்று ஆங்கிலேயப் பொதுப்பணித் துறையில் பணியாற்றிய பா.வே.மாணிக்க நாயக்கர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கரியது. தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, மொழியியல், அறிவியல்

மேலும்