மனந்திறந்து எழுதிய ஜெ., - கட்டுரையாளர் ரஜத்

          ஜெயலலிதா அவர்களை நேர்காணல் செய்து, அவர் பேச்சை டேப்ரிக்கார்டரில் ஆடியோவாக ரெக்கார்ட் செய்தவர் கட்டுரையாளர் ரஜத். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி அண்ணாமலை அவர்களிடம் ஜெயலலிதாவின் பேச்சை போட்டுக் காண்பித்தார். ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக அந்த ஒலிப்பதிவைக் கேட்டவர் கட்டாயம் குமுதத்தில் தொடராக வெளியிடலாம்

மேலும்

இந்தியாவின் முற்காலப் பெருமையும் தற்கால நிலைமையும் - பாரதி சொற்பொழிவு

  பாரதியின் வாழ்க்கைப் பயணம் மிகக் குறுகியது. அந்தக் குறுகிய வாழ்க்கைப் பயணத்திற்குள் அவர் சில ஊர்ப்பயணங்களை மேற்கொண்டிருந்திருக்கின்றார். பாரதி தமிழ்நாடு பற்றிப் பாடியிருந்த போதிலும், அன்று தமிழ்நாடு ஒரு மாநிலமாக உதயமாகவில்லை. தென்னகம் சென்னை மாகாணமாக இருந்தது. தென்னகத்தில் சில கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் அவர் பயணம்

மேலும்

காலம் கடந்த கலைஞர் “என்.எஸ்.கிருஷ்ணன்” - சோழ.நாகராஜன்.

 தமிழகத்தின் மதுரையில் வசிக்கும் எழுத்தாளர் சோழ. நாகராஜன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீதான அளவுகடந்த பற்றின் காரணமாக அவரது பாடல்களையும், அவரது வாழ்வின் செய்திகளையும் தொடர்ந்து பொது மேடைகளில் பாடி, பேசிவருபவர். கலைவாணர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருடைய நேர்காணல்... கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்கும், சமூதாய அக்கறைக்கும்

மேலும்

‘நெல்’காப்பியங்கள்..!

பழந்தமிழர்கள் பின்பற்றிய வேளாண்மை நுட்பமும், அறிவுத் திறனும் சிறப்பானதாக இன்றளவும் பேசப்படுகிறது. பண்டைக் காலத்தில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான நெல் வகைகள் இருந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தமிழில் இலக்கண நூலான தொல்காப்பியம் பயிர் வகைகளில் நெல்லையும், எண்ணெய் வித்துகளில் எள்ளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.

மேலும்

வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க !

தமிழ்மொழி… பல்வேறு காலகட்டங்களில் பல இன்னல்களைச் சந்தித்து வந்தது. அதில் மிகவும் முக்கியமான காலகட்டம், 1960களில் இந்தி திணிப்பிற்கு எதிராக எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டம். பல்வேறு தமிழ் ஆளுமைகளும், தமிழ் ஆர்வளர்களும் அதில் பங்கேற்று சிறைச்சென்ற நாட்களைப் பற்றி நாம் படித்திருப்போம். அதில் மிகவும் முக்கியமான இந்தி எதிர்ப்பு

மேலும்

தமிழ்க் கவிஞரும் தெலுங்குச் சுவைஞரும்

பன்னிரண்டு வயது மாணவர் ஒருவர்; கவிதை எழுதினார்.இது ஒரு பெரிய விஷயமா? அந்த வயதில் எல்லா மாணவர்களுக்கும்தான் கவிதை எழுதுகிற ஆசை இருக்கும். காகிதத்தில் ஐந்தாறு வரிகள் எழுதிப் பார்ப்பார்கள். ஆனால், இராசமாணிக்கம் என்ற இந்த மாணவர், ஐந்தாறு வரிகள் எழுதவில்லை, காவியம் எழுதினார். அதுவும் ஒன்றல்ல, இரண்டு காவியங்களை எழுதினார். அந்த வயதில்,

மேலும்

செங்கோல் மன்னர்களின் எழுதுகோல்!

அந்தக் காலத்தில் நிறைய அரசர்கள் பாடல் எழுதும் திறமை பெற்றவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சில அரசர்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்:சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழ அரசன் செங்கணான் என்பவரோடு போரிட்டுத் தோற்றவர். இதனால் சோழ அரசன் இவரை சிறையில் அடைத்தான். சிறையில் வாடியபோது தாகம் எடுக்கவே காவலனிடம் தண்ணீர்

மேலும்

எம்.ஜி.ஆரின் செண்டிமென்ட்!

எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:“பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!பொதுவாக சினிமா கலைஞர்கள்

மேலும்

சென்னைப் பட்டணம்! - ஏ.கே.செட்டியார்

   கம்பீரமான கட்டடங்களுக்கும், அழகிய கட்டடங்களுக்கும் இந்த சென்னைப்பட்டணம், கல்கத்தா, பம்பாய், லட்சுமணபுரி முதலிய பட்டணங்களுக்கு பின்வாங்கியதே.இச்சென்னையில் உள்ள கட்டடங்களில், ஜெனரல் போஸ்டாபீஸ், பெரிய இரயில்வே ஆபீஸ், ஹைகோர்ட், கிறிஸ்துவ வாலிபர் சங்கம், முனிசிபல் ஆபீஸ், கலஸ மஹால், முதலிய கட்டடங்கள் கொஞ்சம் சிறந்தவைகள். இந்தக்

மேலும்

சதிர் - நாட்டியத்தின் மூதாய்

 வரலாற்று நோக்கில் இந்தியாவின் செவ்விய ஆடல் கலைகளில் ஒன்று, பரதம் எனும் நடனக்கலை. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழகத்தில் கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் ஆட்டம் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப் பெற்று வருகின்றன. அவ்வகை நடன முறைகளில் சில மாற்றங்கள் செய்து வடிவமைக்கப் பெற்றதுதான் பரதநாட்டியம்

மேலும்

மூவேந்தர்களின் மலர்கள்!

அன்றைய தமிழகத்தை, சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள மலர் இருந்தது. அதனை புறநானூற்றுப் பாடலில் எழுதியுள்ளார் கோவூர்கிழார்.நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்று இரண்டு மன்னர்கள். இருவருமே சோழர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதுவதற்குத் தயாராக நின்றார்கள்.

மேலும்