கவிஞர் ஆத்மாநாம் விருது - 2018

கவிஞர் ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும்  மெய்ப்பொருள் பதிப்பகம் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையைக் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. அவ்வருடத்தில் இருந்து தொடர்ந்து கவிஞர் ஆத்மாநாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு கவிஞர் இசைக்கும், 2016ஆம்  ஆண்டு  ‘மீகாமம்’ தொகுப்புக்காகக்

மேலும்

சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிருங்கை சேதுபதியின் ‘சிறகு முளைத்த யானை’ குழந்தைப் பாடல்கள் தொகுப்பிற்கு பால புரஷ்கார் விருதும், சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ சிறுகதை தொகுப்பிற்கு யுவ புரஷ்கார் விருதும்

மேலும்

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்

தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரார் பாலகுமாரன். தஞ்சாவூர் மாவட்டம் பழமார்நேரி கிராமத்தில் பிறந்தவர். 1969ல் இருந்து கவிதைகள் கட்டுரைகள் என எழுதத் தொடங்கியவர் பிற்காலத்தில் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளராக ஆளுமை செய்தார். இவருடைய இரும்பு குதிரைகள், அகல்யா, கங்கை கொண்ட சோழன் போன்ற பல்வேறு வரலாறு மற்றும் புனைவுக் கதைகளை

மேலும்

ஆன்மிக அறிஞர் அறிவொளி..!

 பட்டிமன்றம் நடுவர் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் என மக்களைத் தன் பேச்சின் ஊடாகக் கட்டிப் போட்டவர் பேராசிரியர் அறிவொளி. இவரின் ஜோடனைகள் இல்லாத தெள்ளத் தெளிவான தமிழ்ப் பேச்சு மக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. @Image@நாகை அருகே உள்ள சிக்கல் என்கிற ஊர் தான் இவரது பூர்வீகம்.  ஆனால் வளர்ந்து வாழ்ந்தது எல்லாம் திருச்சியில்

மேலும்

சுஜாதா விருது - 2018

வருடம்தோறும் சுஜாதா அறக்கட்டளை மற்றும் உயிர்மை பதிப்பகம் சுஜாதா இலக்கிய விருது வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான (2018) சுஜாதா விருதினை அறிவித்திருக்கிறா கவிஞர் மனுஷ்ய புத்திரன்.வழக்கமான அறிவிப்பாக இல்லாம, ஒரு புது முயற்சியாக முகநூல் நேரலையில் இவ்விருதுகள் குறித்த அறிவிப்பைச் சொன்னார் மனுஷ்ய புத்திரன். கூடவே விருதுபெற்ற

மேலும்

தேசாந்திரி பதிப்பகத்தில் சிறப்புத் தள்ளுபடி

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி பதிப்பகத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு 20 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாளான பிப்ரவரி 12ம் தேதியில் இருந்து உலக புத்தக தினமான ஏப்ரல் 24ம் தேதி வரைக்கும் இந்த சிறப்புத் தள்ளுபடிக்கு புத்தகங்கள் விற்பனைக்கு

மேலும்

விஜயா பதிப்பகம் வாசகர் வட்ட விருதுகள் - 2018

 2018ம் ஆண்டிற்கான விஜயா பதிப்பகம் வாசகர் வட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் இருந்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் நூலகர்களை ஊக்குவிக்கும் விதமாக புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மீரா, சக்தி வை.கோவிந்தன் ஆகிய படைப்பாளர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த வருடம்

மேலும்

திரைப்படமாகிறது வெட்டாட்டம் நாவல்!

  கிளாசிக் எழுத்தாளர்களான தி.ஜா, கல்கி, அகிலன், அசோகமித்ரன், ஜெயகாந்தன் போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சமகாலத்தில் க்ரைம் கதை மன்னரான ராஜேஷ்குமார், இந்திரா பார்த்தசாரதி, அனுராதா ரமணன் போன்ற வெகுஜன நாவல் எழுத்தாளர்களின் கதைகளும்

மேலும்

“அன்பின் பெருவெளி ஆண்டாள்” தமிழ் நாடகம்

தமிழ் பக்தி இலக்கியப் பரப்பில் ஆண்டாள் தவிர்க்க முடியாத ஆளுமை. தோழியர், கூட்டுணர்வு, ரகசியம், காதல், காமம், கிளர்ச்சி, விடுதலை உரையாடல் என அவர் காலத்தில் எடுத்தெழுதிய தீவிரங்களை ஆண்டாளின் பாடல்கள் ஒலிக்கின்றன. அவரது பாசுரங்களை நாடகவடிவில் வழங்கும் நிகழ்ச்சியை நாடகக் கலைஞர் வெளி.ரங்கராஜன் மற்றும் பகுர்தீன் (உதவி)

மேலும்

ஒடிசா எழுத்தாளர் சந்திரசேகர் ராத் காலமானார்

 ஒடிய இலக்கியத்தின் மிக முக்கியமான மூத்த எழுத்தாளராக இருந்தவர் சந்திரசேகர் ராத்.  ஒடிய வட்டார வழக்கின் மூலம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். 1997ம் ஆண்டு ‘சபுதரு திர்கராதி’ என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் ஒடிசா சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். இலக்கிய துறைக்கு இவர் ஆற்றிய

மேலும்