கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி

- லின் சாங்யிங், தமிழில் : ஆதி வள்ளியப்பன்

 அந்த ஊரிலேயே பூச்சிகளை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆள் ஒரு பொறி வண்டு. ஆனால், அதைவிட பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?

மேலும்

பேசும் தாடி - உதயசங்கர்

- உதயசங்கர்

ஊரிலிருந்து தாத்தாவும் அம்மாச்சியும் வந்தாச்சு. இனி சுகானாவையும் சூர்யாவையும் கையில் பிடிக்க முடியாது. அக்காவுக்கும் தம்பிக்கும் நேற்றுதான் முழுப்பரீட்சை முடிந்து பள்ளிக்கூடம் லீவு விட்டார்கள்.சொல்லிவைத்த மாதிரி இன்று கிராமத்திலிருந்து அவர்களுடைய அம்மாச்சியும் தாத்தாவும் வந்துவிட்டார்கள். அவர்களுடன் இருந்தால் பொழுது

மேலும்

மாலுவின் டயரி - ஞானி

- ஞானி

தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் சுட்டி விகடனில் எழுத்தாளர் ஞானி எழுதிய கட்டுரைகள், ‘மாலுவின் டயரி’ என்ற தொகுப்பாக வெளியாகியிருக்கிறது. மாலு, பாலு, வாலு தான் கதையின் நாயகர்கள். கேள்வியைக் கேட்பது மட்டுமல்லாமல், அதற்கான பதிலையும் தேடி குழந்தைகளைச் சிந்திக்க வைக்கிறது ‘மாலுவின் டயரி’...தொடர்புக்கு : 94440

மேலும்

சிவப்புக்கோள் மனிதர்கள் - க.சரவணன்

- க.சரவணன்

 “டேய் அருண் உண்மையாவா சொல்ற? இப்ப இருக்கிற உங்க வீட்டில் கரண்ட் இல்லையா?”“நிஜமாத்தான் சொல்றேன். எங்க வீட்டில் மட்டும் இல்லை. எங்க ஏரியாவிலேயே கரண்ட் கிடையாது. அடுத்த வாரம்தான் செளராஸ்டிராபுரம் போறோம். நீ வேணும்னா இந்த வாரம் வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு வாயேன். ஒருநாள் தங்கலாம்.”“எங்கம்மா கிட்ட கேட்டு எப்படியும் வந்திடுறேன்.

மேலும்

இருட்டு எனக்குப் பிடிக்கும் - ரமேஷ் வைத்யா

- ரமேஷ் வைத்யா

  பெரும்பாலும், குழந்தைகளுக்கான இலக்கியமாக, கார்ட்டூன் கதைகளும், மாயமந்திரக் கதைகளுமே வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், இயற்கைச் சூழல் சார்ந்து நாவலாக வெளியாகியிருக்கிறது ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’.ஒருநாள் சுற்றுலாவுக்காக கண்ணன், ரவி, ராகினி, குமார், ஷீலு, ஜோ ஆகிய ஆறு சிறுவர்களும் மேகமலைக்குப் போகிறார்கள். அவர்கள்

மேலும்

யானை பறந்தபோது - ரமேஷ் வைத்யா

 திடீரென்று ஒரு குழந்தை நம்மிடம் வந்து ‘ஒரு கதை சொல்லுங்க’ என்று கேட்டா, என்ன செய்வீர்கள்?. ஏதாவது ஒரு கதை சொல்லுவேன்’ என்று சொல்பவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் உங்களிடம் கதை கேட்பது ஒரு சிறுவன் (அ) சிறுமி. நீங்கள் சொல்லப்போகிற கதை அவர்களுக்கானதாக இருக்க வேண்டும். அவர்களுக்கானது என்று அடிக்கோடிட்டு சொல்லும்போதே கதை எப்படி

மேலும்

ஒரு நாயின் கதை - பிரேம்சந்த்

- யூமா வாசுகி

இந்தி கதை இலக்கியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த பிரேம்சந்த் குழந்தைகளுக்காக எழுதிய கதை இது. தன் அறிவாலும் ஆற்றலாலும் மனிதர்களுக்கு வியப்பூட்டும் கல்லு எனும் நாய்க்குட்டி தன் கதையைச் சொல்கிறது. அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் யூமா

மேலும்

திரு.குரு ஏர்லைன்ஸ்

- விழியன்

திரு.குரு என்ற மனிதக்குரங்கார் முதல் விமானத்தை இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு இயக்குகிறார். யார் யார் விமானத்தில் சென்றார்கள். வழியில் என்ன நடந்தது என்ற கதையே திரு குரு

மேலும்

சுண்டைக்காய் இளவரசன்

- யெஸ்.பாலபாரதி

ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியில் கற்றல் என்பது கதைகளைப் படிப்பது தான். அதாவது பள்ளிகளில் கதைகளை மட்டுமே பாடமாக உடைய நாடு அது. அந்நாட்டின் இளவரசன் ஒரு சாபம் காரணமாக சுண்டைக்காயாக மாறிவிடுகிறான். அதுமட்டுமல்ல, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழகத்துச் சிறுவன் சூர்யா கையில் சிக்குகிறான். ‘சுண்டைக்காய் இளவரசன்’ எனும்

மேலும்