விடுமுறையில் ஒரு கதை

டில்லியைச் சேர்ந்தவர் திவ்யஷா. 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதிவிட்டுக் கல்லூரியில் சேரும் கனவுகளோடு காத்திருந்தார். அப்போது தனது மனத்தில் தோன்றிய கதையை எழுதத்தொடங்க, அது ஒரு நாவலாக விரிந்தது. வெறும் மூன்றே மாதத்தில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் பெயர் 'A 20 Something Cool Dude'.திவ்யஷா எழுதிவிட்டாரே தவிர, அதை எப்படி வெளியிடுவது என்று

மேலும்

தீ சொற்கள்

'தீ'யைக் குறிக்க தமிழில் பல சொற்கள் உண்டு. வசு, தழல், வன்னி, எரி, அனல், கனல், அரி, கனலி, அங்கி, அங்காரகன், எழுநா, அழல், இறை, ஆரல் ஆகியன தீயைக் குறிக்கும் பொதுப் பெயர்கள்காட்டில் ஏற்படும் தீயை, 'காட்டுத் தீ, காட்டெரி, தாவம், வரையனல்' என்பர். விளக்கில் ஏற்றப்படும் தீ, தீபம், சுடர், தீவிகை, ஒளி.  தீயில் ஏற்படும் பொறியைத் தீப்பொறி, புலிங்கம்

மேலும்

ஒன்று சேர்ந்த அன்பு - புனர்வஸு

ராத்திரி மணி எட்டு இருக்கும். “அம்மா சோறு போடு. அம்மா. பசி காதை அடைக்குது” என்று கூவிக்கொண்டே ஒரு சிறுமி பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள்.அவளின் பரிதாபமான குரலைக் கேட்டு, வீட்டின் உள்ளே இருந்து வாசலுக்கு வந்தான் பாலு. வாசல் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த சிறுமியைப் பார்த்ததும் பாவமாக இருந்தது.அந்தச் சமயம் அவன் வீட்டில் அம்மா,

மேலும்

மாற்றிப் படி!

ஓவியா திண்டாடிப் போய்விட்டாள். இரவில் இரண்டு மூன்றுமுறை என்னை அழைத்தாள். இயற்பியலில் அவள் கேட்ட சந்தேகங்களுக்கு என்னால் பதிலே சொல்ல முடியவில்லை. ஓவியாவும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து, இயற்பியலில் இரண்டு மூன்று சார்ட்டுகளை வரைந்தும், எழுதியும் பள்ளிக்குக் கொண்டு வரவேண்டும்.நாளை மறுநாள், பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

மேலும்

குற்றமும் தண்டனையும்!

“ஒருத்தர் தப்பு செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் பாலு. “அது யாராக இருந்தாலும் முதலில் அது தப்பு என்பதை நாம் தயங்காமல் சொல்ல வேண்டும்.” என்றேன்“தண்டிக்க வேண்டாமா?” என்று கேட்டான் பாலு.“எல்லா சமயமும் தண்டிக்கத் தேவையில்லை. எச்சரித்து அவர்களைத் திருத்த முடிந்தால் எச்சரிக்கலாம். திரும்ப அதே தப்பைச் செய்தால்

மேலும்

‘சேர்ந்தும் பிரிந்தும் பொருள் தரும் எழுத்து’

- மொழி அறக்கட்டளை

 தமிழ் வாக்கியத்தில் ஆங்கில வினைச்சொற்களால் நேரடியாக இயங்க இயலாது. செய்தல் அல்லது பண்ணுதல் போன்ற வார்த்தைகளின் துணைகொண்டே பொருள் தர முடியும். உதாரணமாக, cook எனும் வினைச்சொல்லை தமிழ் வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால், அவன் நன்றாக cook செய்தான் என்றே எழுத முடியும். ஆனால், சமை என்பது நேரடியாக இணையும். அவன் நன்றாகச் சமைத்தான். 

மேலும்

வன்முறையில்லா வகுப்பறை எங்கே நடக்கிறது?

- ஆயிஷா இரா.நடராசன்

  லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான உளவியல் நூல்கள், உலகளாவிய மாற்றுவழி என்றிருப்பினும் வகுப்பறை வன்முறைக் கூடமாக உருவாகும் நிலையைத் தோலுரித்து, கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லாத பயிற்று முறையையும், வன்முறையில்லாத வகுப்பறையையும் நோக்கி புதியபாதை அமைக்கிறார் இந்நூலின் வழியாகக்

மேலும்

பூமிக்குப் பெருமை சேர்த்தவர்கள் - ஜோ மல்லூரி

 சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்றைய நாளில் பேசிய நடிகரும் இயக்குநருமான ஜோ மல்லூரி ‘பூமிக்குப் பெருமை யாரால்?’ என்ற தலைப்பில் பேசினார். அதில், ”மனித இனத்தின் நன்மைக்காக, உழைக்கும் மக்களின் நலனுக்காக முதுகில் சுமக்கும் அரிசி வயிற்றுக்குச் சோறாகவேண்டும் என்ற சிந்தனைக்காக தன் 21 ஆண்டுகளை நூலகங்களிலே செலவிட்ட கார்ல் மார்க்ஸ்,

மேலும்

நெல்லையில் கக்கன் ஓவியக் கண்காட்சி

  தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி நகரம் மந்திரமூர்த்தி மேல்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தொல்லியல் நுண்கலை மன்றம், சித்திர சபா அறக்கட்டளை சார்பில் ‘எளிமையின் சின்னம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு நல்லாசிரியர் செல்லப்பா தலைமை வகித்து,

மேலும்

சென்னைப்பட்டணம் செல்லும் பாதை - டிராம் போக்குவரத்து

  கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வே (Madras Electric Tramway Ltd) 1892 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ட்ராம் ஓடுவதற்கான டிராம்வே (Tramway) போடும் பணிகள் April மாதத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணிகள் முடிந்து சென்னையில் டிராம்கள் ஓட துவங்கிய தினம் மே 7, 1895. 1904 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட டிராம்கள் சென்னையின் பல்வேறு குடியிருப்பு

மேலும்