கூர்நோக்கு இல்லத்தில் தொடங்கிய பயணம் கூத்துப்பட்டறை நோக்கி திசைதிரும்பியதற்கு தன்னுடைய வாசிப்பும், நாடக எழுத்தும் எவ்வளவு துணையாக இருந்தது என்பதையும், தற்போதைய கலை எழுத்துச் சூழல், வாசிப்பு தன்மைகள் குறித்து நூல்வெளி.காம் தளத்திற்கு நடிப்பு இதழ் ஆசிரியரும், பயிற்றுநருமான தம்பி சோழன் அளித்த நேர்காணல்..
தமிழர்களின் தொன்மைகளையும் வரலாறுகளையும் இலக்கியங்கள் வழியாக மட்டுமே ஆய்வு செய்துவந்த காலத்தில், குமரிக்கண்டம் குறித்த ஆய்வுகளை முதன் முதலில் களத்தில் இறங்கி பதிவு செய்தவர் ஒரிசா பாலு. அவருடைய குமரிக்கண்ட ஆய்வு, தமிழர்களின் தொழில்நுட்பம், ஆய்வின் மூலம் நாம் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து நூல்வெளி வாசகர்களுடன் அவர்
பாதரசப் பிரியங்கள் கவிதைத் தொகுப்பின் நூலாசிரியர் சாய் இந்து, தன் கவிதைகள் அவற்றின் மீதான விமர்சனங்கள், சமீபமாக வெளியான பெண் கவிஞர்கள் நூறு கேள்விகளுக்கு பதிலளித்த 'படைப்புலகம்' (கலைஞன் பதிப்பகம்) நூல் குறித்து எழுந்த சர்ச்சைகள் குறித்து நூல்வெளி.காம்-க்கு அளித்த நேர்காணல்...
தமிழின், தமிழரின் தொன்மையை மீட்டுருவாக்கம் செய்யும் ஆய்வுகளில் ஈடுட்டு வருபவர் ஒரிசா பாலு. நீரோட்டங்களின் வழியாக ஆமைகளின் கடல்வழிப் பயணம், ஆமைகளைப் பயன்படுத்திய பழந்தமிழரின் கடல் பயணம், அவர்களின் நாகரிகம், பல்லுயிர்களையும் விலங்குகளையும் நேசித்த தமிழர்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களை நூல்வெளி வாசகர்களுடன்
தமிழின் மிக முக்கியமான ஆய்வாளர் ஒரிசா பாலு என்கிற பாலசுப்பிரமணியம். தமிழர்களின் வரலாற்றையும், வாழ்வையும் வெளிக்கொண்டு வரும் ஆய்வுகளை மேற்கொண்டவர், மேற்கொண்டு வருபவர். கலிங்கம், ஆமைகள் பற்றிய ஆய்வு, கடல்கோள் கண்ட குமரிக் கண்டத்தை ஆதாரப்பூர்வமாக கண்டடைந்தவர். மேலும் மிகமுக்கியமானப் பணியாக உலகெங்கிலும் பரவியுள்ள தமிழ்
கடந்த வாரம் தன்னுடைய பால்யம், வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பயண எழுத்தாளர் அருணகிரி தன்னுடைய படைப்புகள் குறித்தும், ஏன் புனைவு எழுத்துகளான கதை கவிதைகளுக்கு எதிரானவராகத் தன்னை அறிவித்துக் கொள்கிறார் என்பதற்கான காரணங்களையும் நூல்வெளி வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார்.
கரிசல் மண்ணில் இருந்து உலகைச் சுற்றிவரும் கனவுகளோடு புறப்பட்டு வந்தவர் எழுத்தாளர் அருணகிரி. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமூகத்தினர் ஒவ்வொருவரும் தன் முந்தைய தலைமுறையின் கொடிவழியினை அறிந்திருப்பதோடு, உலக ஞானங்களை தம் மொழியில் கொண்டுவந்து சேர்க்க பயணங்கள் மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து பரப்புரை
சல்மான் ருஷ்டியின், ‘மூரின் கடைசிப் பெருமூச்சு’ (Moor’s Last Sigh) கேரளாவின் கொச்சி நகரிலும், மும்பையிலும் வசிக்கும் நறுமணப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இரு பெரும் செல்வச் செழிப்பான குடும்பங்களின் கதை. குலப் பெருமை பேசும் ஒரு குடும்பத்தின் வேர்கள் ஸ்பெயின் நாட்டை ஆண்ட ஒரு மூரிடம் சென்று முடியும். முற்றிலும் புனைவான ஒரு கதை.