முதல் இரண்டு மொழிப்பெயர்ப்பு நூல்களிலே அபரிமிதமான வாசகக் கவனம் பெற்றவர் எழுத்தாளர் இரா.முருகவேள். இவரது முதல் நாவலான ‘மிளிர்கல்’லில் காங்கேயம் உட்பட கொங்குப் பகுதியில் நடைபெறும் இரத்தினக் கற்கள் வணிகத்தையும், இரத்தினக் கற்கள் தேடும் கும்பல்களின் அடாவடிகளையும் , சிலப்பதிகாரத்தின் மீதான அடிப்படையான
புதிய தலைமுறை எழுத்துக்கள் உருவாகும் இடமாக சமூக ஊடங்கள் மாறிவரும் சூழலில், தன்னுடைய கணினித்துறை அனுபவங்களோடு கவிதைகள் எழுதுபவராக தமிழ் சூழலில் அறிமுகமானவர் ஷான் கருப்புசாமி. கவிதைகள் மட்டுமல்லாது, தன்னுடைய துறைசார்ந்த அனுபவங்களைக் கட்டுரைகளாகவும், தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் பெருந்துறை மக்களின் வாழ்க்கையைப் பேசும்
‘வலை’ எனும் குறும்புதினம் மூலமாகத் தமிழ் எழுத்துலகில் தனது தடத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஜான் பிரபு. கடலோடி மக்களின் வாழ்க்கையில் வலிகளை மட்டுமே செய்திகளாகப் பதிவு செய்யும் நிலையில், அவர்களது வாழ்க்கையின் மற்ற பக்கங்களையும் என் எழுத்தின் வழியாகப் பேசுகிறேன் எனும் ஜான் பிரபு, தென் இந்தியாவின் கடைக்கோடி கடலோர
வாசிப்பும், எழுத்தும் ஒரு மனிதனை என்னவாக மாற்றும்? சமூகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் அவனை இந்தச் சமூகத்திற்கு ஒரு படைப்பாளனாக அறிமுகப்படுத்தும். திருக்கழுகுன்றம் மலையடிவாரத்து நூலகத்தில் தனது வாசிப்பைத் தொடங்கி, எழுத்தாளர், வசனகர்த்தா, ஆவணப்பட இயக்குனர் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் எழுத்தாளர்
இலக்கியமும் சினிமாவும் வேறு வேறல்ல. தமிழ் சினிமா உலகில் நாவல்களையும் சிறுகதைகளையும் தழுவி எடுத்த திரைப்படங்கள் மாபெறும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர்களிடம் இருந்த வாசிப்பு ஆர்வம். தான் வாசித்த ஒரு கதையை திரைக்கதையாக மாற்றும் திறன் அவர்களுக்கே உரியது. தனது வாசிப்பின் மூலம் இந்திய திரைப்பட உலகில்
கரிசல் நாட்டார் கதைகள், வசவுச்சொற்கள், விடுகதைகள், சொலவடைகள், பாலியல் சேகரிப்புகள், சிறுவர் கதைகள் என்று தேடிச் சேகரித்து ஆவணப்படுத்தியவர் எழுத்தாளர் கழனியூரன். தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தொடங்கியவர் நாட்டுப்புற வழக்காற்றியலில் தொட்டலைந்த தூரங்கள் அளப்பரியவை. தன்னுடைய இறுதிக்காலம் வரை நாட்டுப்புற ஆய்வுகளிலே
காய்ந்தால் புழுதி, பேய்ந்தால் சகதி என்று தங்கள் சொந்தபிரதேசத்தின் வறட்சியைப் பற்றி அங்கலாய்ப்பவர்கள் ராமநாதபுரத்து மக்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் வறட்சியை மட்டுமே தன் அடையாளமாகக் கொண்ட கடைக்கோடி கிராமத்தின் வாழ்வை ரத்தமும் சதையுமாகத் தன் எழுத்தில் பதிவு செய்தவர் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி.. நூல்வெளி தளத்திற்காக
தீவிர கமர்ஷியல் சினிமா இயக்குனரான வெங்கடேஷுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய அனைத்து திரைப்படங்களுக்கும் வசனம் எழுத, உடன் ஓர் எழுத்தாளரை வைத்திருப்பார். எழுத்தாளர்களை தேடித் தேடி சந்திக்கவும், அவர்களின் படைப்புகளை வாசிக்கவும் ஆர்வம் காட்டுபவர். இவருடைய நிஜப் பெயர் விக்னேஷ்வரன்.
கோவை மாநகர சாலைகளில் சாதாரண ஆட்டோக்காரராக மக்களோடு மக்களாக வளம் வந்து கொண்டு இருப்பவர் ஆட்டோ சந்திரன் என்கிற மு.சந்திரகுமார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்றும், இலக்கியவாதி என்றும் கோவை வாசிகளுக்கு தெரியாது. அவரும் தன்னை ஒரு படைப்பாளி என்று யாருரிடமும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. நாவல், சிறுகதை, கட்டுரை, என
‘இனிவரும் காலத்தில் உலகம் முழுமைக்கும் காண்பியல் தொழில் நுட்பம்தான் அடுத்தக்கட்ட வளர்ச்சி. புத்தகங்கள் தான் நம்மை உருவாக்கின. அதேநேரம் அடுத்தக் கட்ட டிஜிட்டல் நகர்வுக்கும் தயாராக வேண்டிய தேவையை நாம் உணரவேண்டும்’ என்று தொடக்கத்திலே தன் சாட்டையைச் சுழற்றிவிட்டு நேர்காணலுக்குத் தயாரானார் தமிழ் இலக்கியப் பரப்பில் மிக
கவிநயமான பேச்சில் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தகள் உதிர்வதைப் பார்க்க முடிகிறது கவிஞர் மரபின் மைந்தன் முத்தையாவிடம். நமது நம்பிக்கை என்ற வெகுஜன பத்திரிகை நடத்திக் கொண்டே...தீவிர இலக்கிய வட்டத்திலும் இயங்குபவர். தன்னம்பிக்கை, இலக்கியம். ஆன்மிகம் என எதைப் பற்றி பேசினாலும் அழுத்தமான பதில் அவரிடம் இருந்து கிடைக்கிறது...இதோ அவருடன்