பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை - கவிதை தொகுப்பு

- ஸ்ரீவள்ளி

 சமீபத்தில் வெளியான கவிதை தொகுப்பு. ஸ்ரீவள்ளி (எ) பெருந்தேவியின் கவிதைகள் முகநூலில் பகிரப்பட்ட பொழுதே பெரிதும் விரும்பி  வாசிக்கப்பட்டன. ஸ்ரீவள்ளியின் கவிதைகள் முற்றிலும் காதல் சார்ந்தவை. பிற காதல் கவிதைகளின் இருந்து அவற்றை வேறுபடுத்துவது அவை வெளிக் கொண்டு வரும் சங்க கவிதைகளின் நீட்சி. ஸ்ரீவள்ளியின் எந்தக்கவிதையும்

மேலும்

கலியுகக் கிழவியும் ஓநாய்க் குட்டிகளும் - புதுவரவு

- தமிழில்: பா.ஜெய்கணேஷ்

 நூல் குறித்து எழுத்தாளர் சல்மா...வரலாறு என்பது பெண்களுக்கு என்றுமே கடினமானதாகவும், வலியும் போராட்டமும் நிறைந்ததுமாகவே இருந்து வருகிறது. அனைத்துக் கால கட்டங்களிலும், பெண்களின் வாழ்வு கண்காணிப்பின் கீழும், பாதுகாப்பின் பிடியிலும் இன்றுவரை உள்ளது. அதிகாரத்தின் குறியீடாகவும் போராட்டங்களின் அடையாளாமாகவும் பெண்களின்

மேலும்

மக்கள் தெய்வங்கள் - கோ.பழனி

  வெவ்வேறு சாதியைச் சார்ந்த ஆணும் பெண்ணும் காதல் செய்வதை எதிர்ப்பது, அவர்களைப் பிரிப்பது, முடியவில்லையென்றால் கொலைசெய்து, அவர்களைத் தெய்வங்களாக்கிவிடுவது என்கிற போக்கில் பல தெய்வங்கள் உருப்பெற்றுள்ளன.நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில், வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும்

மேலும்

அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன்

நான் இலக்கிய வாசகனில்லை. புனைகதைகளை அதிகமாகப் படிப்பவனில்லை. கடைசியாகப் பார்த்த இங்கிலீஷ் படம் ‘ஷோலே’ என்ற அளவில்தான் இருக்கிறது என்னுடைய இலக்கிய வாசிப்பு.ஆனால், சமீபத்தில் நான் படித்து வியந்த, எனக்கு நல்லதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுத்த நூல், ‘அற்றவைகளால் நிரம்பியவள்’. மருத்துவர் பிரியா விஜயராகவன் எழுதியுள்ள நாவல். இரயில்

மேலும்

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு. தியடோர் பாஸ்கரன்

சு. தியடோர் பாஸ்கரனின் இந்நூல், சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன் வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வன உயிர்கள், தாவரங்களின்அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் முன்வைக்கும் எச்சரிக்கைகள்

மேலும்

அழியா முத்திரை - இ.பி.ஸ்ரீகுமார்

- இ.பி.ஸ்ரீகுமார், தமிழில் : குளச்சல் மு.யூசுப்

நவீன மலையாளப் படைப்பிலக்கியத்தில் கருத்து சார்ந்தும் வடிவம் சார்ந்தும் அதிர்வுகளை உருவாக்கிய நாவல் இ.பி.ஸ்ரீகுமாரின் ‘அழியா முத்திரை’. பொருளாதார நிலையில் உச்சத்திலிருக்கும் உபரி வர்க்கத்தினர், உடலுழைப்பால் துவண்டுபோகும் தொழிலாளிகள், நித்ய கர்மம் போல் அலைந்து திரிய விதிக்கப்பட்ட ‘தொழில் பிச்சைக்கார்’ களை மையமாகக்கொண்ட இந்த

மேலும்

சூழலியர்கள் குறித்த அறிமுக நூல்

- ஏற்காடு இளங்கோ

  உலகம் முழுவதிலும் இன்று பேசப்படும் முக்கியமான விஷயம் சூழலியல். மனிதகுலம் வளர, வளர நீர் நிலைகள், காடுகள், மண் வளம் என எல்லாவற்றிலும் தங்களது ஆதிக்கதைச் செலுத்தத்தொடங்கியது. குற்ற உணர்வு இல்லாமல் இயற்கையைச் சுரண்டத்தொடங்கிவிட்டது. இயற்கை அழிந்தால், மனிதனும் அழிவான் என்பது தெரிந்திருந்தாலும், மாற்றுவழிகளில்

மேலும்

தி ரியல் லைஃப் ஆஃப் அலெஜன்ட்ரோ மெய்டா - மேரியோ வர்கஸ் லோசா

- Mario Vargas Llosa

பெரு நாட்டில் 1950ல் ஏற்பட்ட புரட்சிகர எழுட்சியைப் பற்றி புலனாய்வு மற்றும் சாகசக் கதையின் முழு விவரம்தான் இந்த நாவல். வர்காஸ் எழுதிய சில நாவல்களில் நேரடியாக அந்நாட்டு அரசியலைப் பற்றி எழுதிய முக்கியமான நாவல் இது. அலெஜான்ட்ரோ தான் இந்த கதையின் நாயகன். புரட்சிகர தொழிலாளர் அமைப்பில் இவர் ஓர் உறுப்பினர். அவர் ஒர் ஓரினச் சேர்க்கையாளரும்

மேலும்

நான் ஏன் என் தந்தையை போல் இல்லை - ஆயிஷா இரா.நடராசன்

- ஆயிஷா இரா.நடராசன்

எழுத்தாளர் ஆயிஷா. இரா. நடராசன் மரபணுவியலையும் மானுடப் பரம்பரைப் பண்புகள் குறித்தும் எழுதியுள்ள புதிய நூல். அறிவியல் வரலாறு, அறிவியல் கோட்பாடுகள், மூலக்கூறு வேதியியல், பெண்ணியம், இயற்கைத் தெரிவு மரபணுவியல் என பல்வேறு மானுட அறிவுப்புலச் செய்திகளும், அவரின் வழக்கமான மெல்லிய நகைச்சுவைத் தமிழும் ஊடும் பாவுமாக ஓடி நெய்து வந்துள்ள

மேலும்

மனிதம் அதன்பெயர் ராம்பால் : நினைவு கட்டுரைகளின் தொகுப்பு

- தொகுப்பு : ஷீபா ராம்பால்

இயக்குனர் ராம்பாலுடன் நெருங்கிய நட்பில் இருந்த பல்வேறு இயக்குனர்கள், அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல். பல புதிய எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களது எழுத்துகளின் நடை பற்றியும், அதிகம் விவாதிப்பவர் ராம்பால். மண் சார்ந்த கதைகளையும், மனிதம் சார்ந்த கதைகளையும் தேடித்தேடி படிப்பவர். சில

மேலும்

பியானோ - நவீன உலகச் சிறுகதைகள்

- சி.மோகன்

நம் கால மனித வாழ்வில் அதிகமும்  உணரப்படாதிருக்கிற பிரச்னைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவுகொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாக உணர முடியும். எதார்த்த உலகின் வாசலிலிருந்து ஒரு வெட்டவெளி விந்தை உலகை நோக்கி விரிந்து பரவியிருக்கிற கதைகள் இவை.

மேலும்