பியானோ - நவீன உலகச் சிறுகதைகள்

- சி.மோகன்

நம் கால மனித வாழ்வில் அதிகமும்  உணரப்படாதிருக்கிற பிரச்னைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவுகொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாக உணர முடியும். எதார்த்த உலகின் வாசலிலிருந்து ஒரு வெட்டவெளி விந்தை உலகை நோக்கி விரிந்து பரவியிருக்கிற கதைகள் இவை.

மேலும்

தமிழ் சினிமா 100 : சில குறிப்புகள்

- பி.எல்.ராஜேந்திரன்

தமிழ் சினிமா செதுக்கிய சிற்பங்களையும் தமிழ் சினிமாவைச் செதுக்கிய சிற்பிகளையும் அறிமுகம் செய்யும் ஆச்சரியத் தொகுப்பு. ஆரம்பகால சினிமா தொடங்கி இன்றைய காலகட்டம் வரை தமிழ் சினிமா உருவாக்கித் தந்திருக்கும் ஆளுமைகளின் எண்ணிக்கை அபரிமிதமானது. ஆனால் அவர்கள் பற்றிய தகவல்களோ, குறிப்புகளோ போதுமான அளவுக்குப் பதிவுசெய்யப்படவில்லை. இந்த

மேலும்

“விருட்சம் கவிதைகள்-1988-92” - அழகிய சிங்கர்

 1988 ஆம் ஆண்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வரை நவீன விருட்சம் இதழில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல்  “விருட்சம் கவிதைகள் (தொகுதி-1)” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மொத்தம் 94 கவிஞர்களின் படைப்பாளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ள இந்நூலை இதழாசிரியர் அழகியசிங்கர் தொகுத்தளித்திருக்கிறார். எண்பதுகளின் இறுதியையும், தொன்னூறுகளின்

மேலும்

பூகோளவாதம் - புதிய தேசியவாதம்- நூல் வெளியீடு

 ஈழ அரசியல்  அறிஞரும், எழுத்தாளருமான மு.திருநாவுக்கரசுவின் புதிய நூலான “பூகோளவாதம்- புதிய தேசியவாதம்” நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை யாழ்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சரான சி.விக்னேஸ்வரன் பங்கேற்று நூலை வெளியிடுகிறார். சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து

மேலும்

நெடுஞ்சாலை வாழ்க்கை - கா.பாலமுருகன்

- கா.பாலமுருகன்

பயணங்கள் மனிதனின் அகத்தை விரியச்செய்யும் என்பார்கள்.தெளிவாக திட்டமிட்டு,செளகரியமான இடத்தில் தங்கி எழுதப்பட்ட உல்லாச அனுபவங்கள் அல்ல இவை. கறுப்பு நரம்பென நிலமெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் நீண்டு நம் தேசத்தை நெய்யும் நெடுஞ்சாலைகளின் கதை.நெடுஞ்சாலை முழுவதும் நிரம்பி கிடக்கும் மனிதர்கள் பற்றியும், தமிழ்நாட்டு லாரி

மேலும்

காந்தள் சூடி - சத்ரியன்

 கிராமியத்தின் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வை இழந்துபோன துயரம், பொய்த்துப்போன விவசாயம், பாழடிக்கப்பட்ட இயற்கை, வறண்ட ஆற்றின் வலிகள், காட்டை அழித்து நகரங்களைக் கட்டியெழுப்பும் முரண், கைகூடாத காதல் என வலிகளையும், துயரங்களையும் கழிவிரக்கமாகப் பதிவு செய்யாமல் உணர்வுகளைச் சொற்களின் வழி கடத்துகின்றன சத்ரியனின் கவிதைகள்.  ‘காந்தள் சூடி’

மேலும்

பா.ஜெய்கணேஷ் - கவிதைநூல் அறிமுகம்

 ஆசிரியர், ஆய்வாளர், தொகுப்பாளன் என்ற துறைசார்ந்த பயணத்தில் இருந்து கவிஞராகத் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டவர் பா.ஜெய்கணேஷ். தொல்காப்பியம், அடைவு, ஆவணம், வரலாறு, பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம் பன்முக வாசிப்பு முதலான நூல்களை எழுதியும் பதிப்பித்து வெளியிட்ட இவர், மாற்றுவெளி, புதிய புத்தகம் பேசுது ஆகிய இதழ்களின் ஆசிரியர்

மேலும்

கூடுகளில் தொங்கும் அங்காடி - யாழிசை பச்சோந்தி

 கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் அல்லல்படுகிற மனம் கொண்ட மனிதனின் கவிதைகள் பச்சோந்தியினுடையது. மிக நெருக்கடியான, மன வெப்ளாரங்களில் இருந்து அவர் அதை எழுதியதாக நம்புகிறேன். குடும்பத்தைப் பிரிதல், நிலத்தைப் பிரிதல் என நாம் காலங்காலமாக இலக்கியத்தில் மிகப்பெரிய இடங்கொடுத்துப் பேசுகிற விசயங்களே இத்தொகுப்பில்

மேலும்

உணவு யுத்தம் - எஸ்.ராமகிருஷ்ணன்

இந்திய உணவு சந்தை பலஆயிரம் கோடிகள் புழங்கும் மிகபெரும் சந்தை. நாம் என்ன உண்ண வேண்டுமென்பதை அமெரிக்கா போன்ற நாடுகளே தீர்மானிக்கின்றன. இப்படியான வெறும் பிரசங்கங்கள் மட்டுமே செய்யாமல் எதனால் இவ்வாறு நேர்ந்தது. இதன் துவக்கபுள்ளி மற்றும் இதை நாம் எவ்வாறு அணுகுவது போன்ற தகவல்களையும் தனக்கு நேர்ந்த அனுபவங்களின் வாயிலாக

மேலும்

‘முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்’-கௌதம சித்தார்தன்

- கௌதம சித்தார்தன்

  தமிழ் நிலம் முழுமைக்குமான ஆதிக்கடவுள் முருகனை மெல்ல மெல்ல தமிழ் நிலப்பரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒதுக்கிவைத்து, விநாயகனை தேசம் முழுமைக்கும் பொதுமைப்பட்ட கடவுளாக மாற்றுவது, அப்படியான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும்போது அது எளிய தன்மையுடனோ, எளிய மானுட உருவத்துடனோ சித்தரிக்காமல், எளிய மக்களிடையே எதிர்வாதங்கள்

மேலும்

சீனா வல்லரசு ஆனது எப்படி? - ரமணன்

 இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பெரிய ஆசிய நாடுகள். மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம். இரண்டுமே தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஏழைமை, ஊழல், சுற்றுச்சூழல் மாசு என்று இரு நாடுகளின் பிரச்சனைகளும்கூடப் பொதுவானவையே. இருந்தாலும்

மேலும்