சீனா வல்லரசு ஆனது எப்படி? - ரமணன்

 இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பெரிய ஆசிய நாடுகள். மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம். இரண்டுமே தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஏழைமை, ஊழல், சுற்றுச்சூழல் மாசு என்று இரு நாடுகளின் பிரச்சனைகளும்கூடப் பொதுவானவையே. இருந்தாலும்

மேலும்

காற்றினிலே வரும் கீதம் - ரமணன்

- ரமணன்

 இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கைப் பயண நூல். எம்.எஸ்ஸின் வாழ்க்கையை 21 அத்தியாயங்களில் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் திரு.ரமணன். அத்துடன் எம்.எஸ் அவர்களோடு பழகிய பல்வேறு ஆளுமைகளின் நினைவலைகள் நம் நெஞ்சை ஈர்க்கிறது. பளபளப்பான ஆர்ட் பேப்பர். அத்துணை பக்கங்களும் வண்ணம், காணக் கிடைக்காத அரிய பொக்கிஷப் படங்கள்,

மேலும்

வேனல் - கலாப்ரியா

- கலாப்ரியா

புத்தகத்தில் எழுத்தாளர் வண்ணதாசனின் அணிந்துரையிலிருந்து...“குறுக்குத் துறையும் கம்பா நதியும் அதே ஊரில் தான். சாந்தாவும் பாலம்மாக்க்காவும் அதே ரதவீதியில் தான். எல்லா மனுஷிகளும், மீனா, பர்வதம், மூக்கம்மா, சந்தனம், தாயம்மா, விசாலம் எல்லோரும். ' ஒண்ணா பண்ணி ரெண்டா பிட்ட' மனுஷிகள் தான். ஆண்களுக்குத் தான் ஒட்டவைக்கத் தெரியவில்லை.

மேலும்

“கொக்காம்பயிர்” சாந்தா-ஆதிலட்சுமி

 செஞ்சி, தொல்காப்பியர் திடல் குறிஞ்சி விழா மேடையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர்கள் சாந்தா- ஆதிலெட்சுமி ஆகியோரின் “கொக்காம் பயிர்” கவிதை நூல் வெளியிடப்பட்டது. கவிஞர் செந்தில் பாலாவின் தாயாரான சாந்தா மற்றும் அவரது மனைவி ஆதிலெட்சுமி இருவரும் இணைந்து எழுதியிருக்கும் இந்நூலுக்கு எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

மேலும்

புனைவு எனும் புதிர் - விமலாதித்த மாமல்லன்

 12 சிறுகதை ஆசிரியர்களின் ஒவ்வொரு சிறுகதைகளைக் குறித்தும், அதன் உள்கட்டமைப்பு, இயக்கம், இலக்கியப் பார்வை அது எப்படிக் கலையாக மாறுகிறது என்ற வாசிப்பனுபவத்தைத் தரும் நூல் விமலாதித்த மாமல்லனின் ‘புனைவு எனும் புதிர்’ நூல்.  கதை என்பது என்ன? அது ஏன் மறைந்து இருந்து பொருளுணர்த்த வேண்டும். கேளிக்கை எழுத்தாளர்களிடம் இருந்து

மேலும்

ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது - உமா மோகன்

   @Image@ புதிய நிலம்,புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவ வேண்டிய பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன்.  இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை.சொல்லக் கூடாது. ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது.கதையில் வரும் பெண்களின் பயணம், தேடுதலின்

மேலும்

வாசிப்பும் விளையாட்டும் : புதையல் டைரி

- யெஸ்.பாலபாரதி

  புதையல் டைரி நாவல் சிறுவர்களுக்கானது. ஏழாம் வகுப்புப் படிக்கும் ஜான்சன் என்ற சிறுவனுக்கு அவனுடைய தாத்தாவின் டைரி கிடைக்கிறது. அதில் ஒரு புதையல் பரிசு பற்றி தகவலைப் புதிர்களுக்குள் ஒளித்து வைத்திருக்கிறார். தன் நண்பர்களுடன் புதிருக்கான விடையைத் தேடி பயணமாகிறான். அவனுக்குப் புதையல் கிடைத்ததா? அது என்ன புதையல் என்பதுதான்

மேலும்

தி ஸ்ப்ரிட் ஆஃப் த அன்பார்ன் - அறிவியல் புனைவு நாவல் வெளியீடு

- Krish Ramasubbu (Author)

   ‘தி ஸ்பிரிட் ஆப் த அன்பார்ன்’ ஆங்கில நாவல் வெளியீட்டு விழா நேற்று சென்னை காஸ்மோபாலிட்டன் க்ளப்பில் நடைபெற்றது. மருத்துவர், கிரிஷ் ராமசுப்பு எழுதிய அறிவியல் புனைவு நாவலை தினமலர் நாளேட்டின் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, தமிழக ரயில்வே காவல்துறை, கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு நூலினைப்

மேலும்

“நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர்” நூல் வெளியீடு

@Image@  அரசியலாளர் சசி தரூர் எழுதிய “நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்” நூல் வெளியாகி பலதரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்பாக, ரியாட், ஷோ பிஸ்னஸ், ஃபைவ் டாலர் ஸ்மைல் அண்ட் அதர் ஸ்டோரீஸ், தி கிரேட் இந்தியன் உட்பட அவர் நாவல்களும் சசி தரூர் எழுதியுள்ளார். “நான் ஒரு இந்து, நான் ஒரு தேசியவாதி, ஆனால், நான் ஒரு இந்து தேசியவாதி அல்ல”

மேலும்

உலகக் குறும்படங்கள் - ஜேம்ஸ் அபிலாஷ்

- ஜேம்ஸ் அபிலாஷ்

ஜேம்ஸ் அபிலாஷ் எழுதிய உலக குறும்படங்கள் புத்தகத்தை நாதன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தக கண்காட்சியில் நாதன் பதிப்பகம் அரங்கு எண்  631-ல் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.குறும்படங்களின் கருத்து மற்றும் அதன் பயன்பாடு, அவை உருவாக்கும் அனுபவங்கள் குறித்து, இப்புத்தகம் விளக்குகிறது. குறும்படங்களில் கதை, திரைக்கதையின்

மேலும்

மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

- ஆர்.வெங்கடேஷ்

  மோடி, பிரதமராகப் பொறுப்பேற்றபின் 2017ல், நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தியப் பொருளாதாரம். பணப்புழக்கம், நிதிமேலாண்மை, நவீன பொருளாதாரக் கொள்கை தொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது. 

மேலும்