பாரதியாரின் உரைநடை வாரிசு வ.ராமசாமி

 தமிழ் சிறுகதைகளின் பிதாமகன் என்றழைக்கப்படும்  வ.வே.சுப்பிரமணியம், மகாகவி பாரதியார் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் வ.ராமசாமி. முற்போக்கு சிந்தனைகொண்ட வ.ரா.,வை ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் என்று வருணித்தார்’ அறிஞர் அண்ணா.சுதந்தரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு,சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி,

மேலும்

முந்தைய வேக இலக்கை முறியடித்தல்!

பதினான்காவது முழுச்சுற்றை தொடங்கியிருந்தான். ஒரு நல்ல ஒட்டப்பந்தயவீரன் இவன். அபிமானத்திற்கு உரியவன் என்றும் பந்தயத்தில் வெற்றியடைந்து ஒரு புதிய வெற்றி இலக்கைப் பதிவு செய்யக் கூடியவன் என்றும் செய்தித்தாள்கள் அறிவித்திருந்தன. பல வருடங்களாக ஒரு புதிய உச்சபட்ச வெற்றி இலக்கின் பதிவுக்காகக் காத்துக் கொண்டேயிருந்தார்கள்

மேலும்

வண்ணதாசன் கவிதைகள்

 புலரி முன்னிருக்கையில் யாரோ முகம் தெரியவில்லை தலையில் இருந்து  உதிர்ந்து கொண்டிருந்தது பூ தாங்க முடியவில்லை – நீ இருக்கும் திசைக்கு முகம்காட்டி உன் சதுரமான எதிர்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப் பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம் –சூரியனை ஆற்றங்கரை மணலை தொட்டாற்சுருங்கிச் செடியை பாசஞ்சர்

மேலும்

பாரதி நேயன் – ஜீவானந்தம்

“1927ல் பாரதியின் மறைவுக்குப் பிறகு, அவரது பாடல்களைத் தொகுத்து, ‘சுதேச கீதங்கள்’ என்ற பெயரில் தொகுப்பாகக் கொண்டு வந்தார் செல்லம்மாள் பாரதி. அதன்பிறகு, பாரதிக்கு தம்பி முறையிலான விசுவநாதன் என்பவரிடம் பாரதி பாடல்கள் மொத்தத்தையும் பதிப்பிக்கும் உரிமையை 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். அதில் 2 ஆயிரத்து 400 ரூபாய் ஏற்கனவே பெற்ற பழைய

மேலும்

தள்ளாதவன்!

  ஒன்றைச் சொன்னால் அதற்கு ஒரேயொரு பொருள்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரே சொல்லுக்கும் ஒரே சொற்றொடருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களும் இருக்கலாம். தமிழில் அவ்வாறுதான் இருக்கின்றன.'கலம்' என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு உண்கின்ற பாத்திரம் என்று ஒரு பொருள் உண்டு. கப்பல் என்கின்ற பொருளும் உண்டு. ஆக, ஒரு சொல்லே

மேலும்

மகிழ்குட்டி! - நேசமித்ரன்

 அதிகாலைக் கனவில் மேகத்திரளைத் துரத்திக் கொண்டிருக்கிறாள் மகிழ்குட்டிபனிமலைக்கு மேல் பறக்கும்போது சிறகுகள் முளைத்தது மேகத்திரளுக்கு முன்பாக மிதந்து கொண்டிருந்த அன்றில் ஜோடி ஒருகணம் நின்று திரும்பிப் பார்த்தன மகிழ் குட்டியை!முந்திப் பறக்க விசை குறைத்தன உதிரும் நட்சத்திரமொன்றை ஊதிச் சூட்டிவிட்டன ஒரு பிஞ்சு

மேலும்

தேவதேவன் கவிதைகள்

     சிறகுகள்@Image@ வானம் விழுந்து, நீர்; சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை நீரில் எழுந்தது வானம்; சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு சிறகினுள் எழும் சூர்யத் தகிப்பே சிறகடிப்பின் ரகசியம்; ஆகவேதான் சுயவொளியற்ற வெறும் ஒரு பொருளைச் சிறகுகள் விரும்புவதில்லை; பூமிபோன்ற கிரகங்களை அது நோக்கவில்லை சிறகடிக்கையில் சிறகின் கீழே

மேலும்

சொல்லுக்கு முதலில் வராத எழுத்து

தமிழில் இரண்டு ர, ற எழுத்துகள் உள்ளன. சிலர் இதை, சின்ன ர பெரிய ற என்கிறார்கள். அப்படி சொல்லக் கூடாது. ர என்ற எழுத்து யரலவழள என்னும் இடையின எழுத்தாகும். அதனால் இதை “இடையின ர” என்று சொல்ல வேண்டும். இன்னொரு எழுத்து வல்லின ற. கசடதபற என்ற வரிசையில் வருகிறது.இதனை உச்சரிக்கும்போது, நன்கு அழுத்தி “ட்ர” என்று உச்சரிக்க வேண்டும். “ர்ர்ர”

மேலும்

தந்தையும் தனயனும்

 ஒர் ஆசிரியர் தன் மகனும் ஆசிரியராக வேண்டுமென நினைத்ததுண்டு. ஆனால் தன் மகனும் நம்மைப் போலவே எழுத்தாளனாக வேண்டும் என்கிற ஆசை எந்த ஒரு எழுத்தாளுமைக்கும் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது. ஆனால் அது சாத்தியமாகியிருக்கிறது 21 ஏ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுன் என்ற முகவரியில் இருக்கும் வீட்டில். தமிழ் படைப்பிலக்கியத்தின் இருபெரும்

மேலும்

ஆன்மாவை விலைபேசாத எழுத்தாளன்

 தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மாபெரும் எதார்த்தவாதியான புதுமைப்பித்தனால், அற்புதமான சிறுகதையாளரெனக் கொண்டாடப் பட்டவர் தொ.மு.சி ரகுநாதன். திக்கெல்லாம் தமிழ் மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து, ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர் தொ.மு.சி. படித்த, பண்பட்ட, கவித்துவம் நிறைந்த ஓரளவு வசதியான குடும்பம் அவருடையது.  இன்னும்

மேலும்

தேர்த்திருவிழா - வா.மு.கோமு

வெண்ணிலாவுக்கு சென்னிமலை தேர் தரிசனத்திற்கு ஏன் தான் வந்தோமோ! என்றே இருந்தது. எல்லாம் இந்த வரதராஜால் தான். இப்போது அவன் தான் வராதராஜாகி விட்டான். இத்தனை ஜனக்கூட்டத்தில் அவனை எங்கே என்று தேடிப்பிடிப்பாள் வெண்ணிலா? கூடவே சுமதி வேறு. சுமதி வேறு யாருமல்ல இவளின் சித்தப்பா பெண் தான். கூட்ட நெரிசலிலும் வளையல் கடை கண்டால் போதும், புது

மேலும்