யார் கொன்றது அந்தப் பழங்குடி மனிதனை? இரா.முருகவேள் பதிவும் போகன் சங்கர் எதிர்வினையும்

     @Image@ கேரளாவில் அரிசிதிருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மது என்னும் பழங்குடி மனிதர் குறித்து நாடு முழுமைக்குமான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. எழுத்தாளர் இரா.முருகவேள் தனது சமூக வலைதளப் பதிவில் பழங்குடியினர் வாழும் பகுதிகளைப் பீடித்திருக்கும் வறுமை, பட்டினிச் சாவுகள் குறித்து

மேலும்

நான் யார்? - கவிஞர் விக்ரமாதித்யன்

 @Image@இந்த பிரபஞ்சம் பற்றி  எனக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் தகவல்கள் இந்த உலகம் குறித்து எனக்கு தெரிந்ததும் புஸ்தகப் படிப்பு இந்த நாடு பற்றி நான் அறிந்தவையெல்லாம் கல்வி கேள்வி எங்கள் ஊர் எங்கள் தெருபற்றியெல்லாம் அனுபவம் கொஞ்சம் கொஞ்சம்தான் எங்கள் வீடு குறித்தே என் அனுபவத்தில் புரிந்து கொண்டது கொஞ்சம் தான்  இவ்வளவு எதுக்கு

மேலும்

பொய் சொன்ன கவிராயர்

இராமச்சந்திர கவிராயர் என்பவர், மிகச்சிறப்பாய்த் தனிப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். அருமையான சித்திரக்கவிகளை இயற்றியுள்ளார்.சித்திரக்கவி என்பது நால்வகைக் கவிதைகளில் ஒன்று. ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்பவை அந்நால்வகைக் கவிதைகள். ஆசுகவி என்பது ஒரு பாடுபொருளைக் கொடுத்ததும் உடனே செய்யுளாக்கிச் சொல்வது. மதுரகவி

மேலும்

பின்னர் கூறினார்கள் - மஹ்மூத் தர்வீஷ்.

 அவர்கள் அவனது வாய்க்குப் பூட்டு போட்டார்கள்கைகளை மரணப் பாறையில் பிணைத்துக் காட்டினார்கள்பின்னர் கூறினார்கள்.நீ ஒரு கொலைகாரன் என்று.அவனது உணவையும் உடைகளையும் கொடியையும் பறித்தார்கள். அவனை மரணச் சிறையில் வீசியெறிந்தார்கள்பின்னர் கூறினார்கள்நீ ஒரு திருடன் என்று.எல்லா முகாம்களிலிருந்தும் அவனைத்

மேலும்

பொன். வாசுதேவன் கவிதைகள்

 இருத்தல்இரை தேடும் பறவையை விட்டு விடுஅதன் பசி அதற்குபோஸ்டரைக் கிழித்துண்ணும் மாட்டைப் பார்க்கிறாய்போகட்டும் விடு; புற்கள் தென்படவில்லைவேறு கதியில்லை அதற்கு‘குக் பக்’கெனக் குரலெழுப்பிப் படபடத்துப் பறந்துஅமர்ந்து இடம் வலம் விழியுருட்டும் புறாக்கள் அழகுதான் அதன் பதற்றம் அதற்கு; ரசித்து விட்டுச் செல்கைப்படுத்திப் பற்றி

மேலும்

வள்ளுவம் சொல்லும் புகழ் - தமிழ்கடல் நெல்லை கண்ணன்.

 மனித வாழ்க்கை தருகின்ற பல அய்யப்பாடுகள் குறித்து வள்ளுவரைத் தவிர யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலும். என் தந்தை எனக்குச் சிறு வயதில் இருந்தே சொல்லித் தந்தது. என்ன அய்யம் ஏற்படினும் அதனை ஒரு கேள்வியாக்கிக் கொண்டு வள்ளுவரிடம் செல் உறுதியாகப் பதில் உண்டு என்பார்கள். மக்களுக்கு எப்போதும் இருக்கின்ற ஒரு பெரிய அய்யம்.

மேலும்

தமிழ் பண்பாட்டில் எருமைகள் - முனைவர். செ. அன்புச்செல்வன்

நம்மூரில் மாடுகளுக்கு எவ்வளவு வரலாறு இருக்கிறதோ அதே அளவு வரலாறு எருமைகளுக்கும் இருக்கின்றது. நிரை என்றால் மாடுகள் மட்டுமன்று, எருமையும் தான் என்று பொருள் சொல்கிறது நெடுநல்வாடை. சங்க இலக்கியங்கள் முதல் இடைக்கால பக்தி இலக்கியங்கள் வரை, எருமைகள் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. அன்றைய சேரநாட்டின் பெரும்பகுதியான இன்றைய

மேலும்

போய் வாருங்கள் ஞாநி! - அப்பணசாமி

   1992 டிசம்பர் 6. அன்று என்ன நடக்கப் போகிறதோ என்ற பதற்றத்தில் பீட்டர்ஸ் காலனி ஞாநி வீட்டில் கூடினோம். கருப்பு வெள்ளை டிவியில் காவி பாசிஸ்டுகள் பாபர் மசூதியை இடிப்பதைக் குறை ஒளியிலும் தெளிவாகக் கண்டோம். பா.ஜ.க மட்டுமல்ல. நரசிம்ம ராவ் அரசும் துரோகம் செய்துவிட்டது. மிகுந்த கொந்தளிப்புடன் காணப்பட்டோம். உடனடியாக ஒரு கண்டன

மேலும்

அறத்தோடு நிற்றல் – நர்மதா நவநீதம்

- நர்மதா நவநீதம்

  கலை, இலக்கியம், பெண்ணியம் சார்ந்து இயங்கும் முனைவர். நர்மதா நவநீதம் எழுதியுள்ள நூல் அறத்தோடு நிற்றல். ஆகுதி- பனிக்குடம் பதிப்பகங்களின் இணை வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில் சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் பெண்ணியம் தொடர்பான  சிந்தனைகள், கலைகள் மற்றும் இலக்கியங்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான

மேலும்

வைரமுத்துவுக்கு ஞானபீடமா? - எழுத்தாளர் ஜெயமோகன் பதிவிலிருந்து...

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை

மேலும்

என்னை வளர்த்த ஏலூர் வாடகை நூல் நிலையம்

 ஏலூர் வாடகை நூல் நிலையம் மூடப்படவிருக்கும் செய்தியை நண்பர் ஒருவர் சற்று முன் முக நூலில் பகிர்ந்திருப்பதை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள். சென்னையில் துவக்க நாட்களில் நான் படித்த சில முக்கியமான ஆங்கில புத்தகங்கள் இங்கிருந்துதான் . அக்காலத்தில் (1997 &,1998 ) வலைத்தளம் புழக்கமில்லாத காலத்தில் ஏதாவது நல்ல ஆங்கில புத்தகங்கள் படிக்க

மேலும்