என்னை வளர்த்த ஏலூர் வாடகை நூல் நிலையம்

 ஏலூர் வாடகை நூல் நிலையம் மூடப்படவிருக்கும் செய்தியை நண்பர் ஒருவர் சற்று முன் முக நூலில் பகிர்ந்திருப்பதை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள். சென்னையில் துவக்க நாட்களில் நான் படித்த சில முக்கியமான ஆங்கில புத்தகங்கள் இங்கிருந்துதான் . அக்காலத்தில் (1997 &,1998 ) வலைத்தளம் புழக்கமில்லாத காலத்தில் ஏதாவது நல்ல ஆங்கில புத்தகங்கள் படிக்க

மேலும்

அந்த நாற்காலி..! - அனாமிகா

    அந்த நாற்காலிஇன்னும் ஆடிக்கொண்டிருக்கிறது...மாமச்சனின் எழுபது வயதின் உடல்ச்சூடு வெகுவாக தணிந்திருக்கின்றது மரிக்கும்வரை நாடன் பாடல்களைமுனுமுனுத்தபடி நேற்றிமீது கொண்டாடியவரின் சரீரம் முழுக்கஉயிர்பிரிந்த மிருகதேகம் அங்கியைப்போல் அணிந்திருக்கின்றன கசேரில் இருந்தபடி கிடத்தப்பட்டிருக்கிற உடலைத் தாண்டி நான்

மேலும்

செம்புலம் நாவல் வெளியீட்டு விழா - இரா.முருகவேள்

- இரா முருகவேள்

   செம்புலம் நாவல் வெளியீட்டு விழா நேற்று ஈரோடு, செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. மார்கழி மாத அதிகாலையில் கோவை நகருக்குக் கிழக்கே இருக்கும் வெட்டவெளிகளினூடே பயணம் செய்வது ஒரு சுகமான அனுபவம். மலைகளில் நகர்ந்து கொண்டிருக்கும் மூடுபனையை விட சமவெளிகளில் புகைபோலத் தோன்றும் பனி

மேலும்

அவர்தான் என் எழுத்தின் பிதா - அண்டனூர் சுரா.

 பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தேறிய சம்பவம் இது. நான், நூலகத்திற்குத் தொடர்ந்து செல்லத் தொடங்கிய காலம் அது. அப்போது நூலகத்தில் வரும் இதழ்களைப் புரட்டிப் பார்ப்பது வழக்கம். அதில் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிறுகதையொன்று பிரசுரமாகியிருந்தது. அடுத்து  இதழைப்பி ரித்தேன். அதிலும் அவரது கதை இருந்தது. அடுத்ததாக என் கவனம்

மேலும்

அந்தமான் நாயகர் - கி.ராஜநாராயணன்

- கி.ராஜநாராயணன்

   அந்தமான் சிறைக்குச் சென்று செக்கிழுத்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ.சி பற்றி நிறைய வாசித்திருக்கிறோம். கி.ரா அவர்கள் தன் நாவலின் வழியே அழகிரி நாயக்கர் என்பவரை அறிமுகம் செய்கிறார்.விளையாட்டு பருவத்தில் அழகிரி மரத்தில் ஏறி இந்திய மூவண்ணக் கொடியை ஏற்ற ஆங்கிலேயர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைக்க அவர் தப்பித்து

மேலும்

'வந்தார்கள் வென்றார்கள்' – சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.

- மதன்

 நான், சமீபத்தில் மறுவாசிப்பு செய்த புத்தகம், விகடன் வெளியிட்ட, மதனின், 'வந்தார்கள் வென்றார்கள்'. நாம், பள்ளியில் சிறுசிறு குறிப்புகளாக படித்த இந்திய வரலாற்றை, எளிய தமிழில், மொத்தமாக நம் கண்முன் நிறுத்துகிறார், மதன்.வடஇந்தியாவிற்கு செல்லும் யாத்திரீகர்களின் உடைமைகளை கொள்ளையடிக்கும், நெடுஞ்சாலை கொள்ளையர்களான 'துக்'குகளை,

மேலும்

அனுபவ அறிவு - ராஜஸ்தானிய நாடோடிக்கதை

இளம் வயதுடைய வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து, நீண்டதூர வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தனர். வழியில் ஒரு வயதான பெரியவர் காட்டைக் கடக்க உதவுமாறு அவர்களிடம் கேட்டார். அவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டனர். அந்த அடந்த காட்டிற்குள் நுழையும் முன் அனைவரையும் அழைத்து, “இது விநோதமான காடு. ஆபத்துகள் அதிகமிருக்கும். அதனால், எங்கேயும் நிறுத்தாமல்

மேலும்

ஒரே ஒரு மனிதன் - வல்லிக்கண்ணன்

போக்குவரத்து நெரிசல் மிக்க முக்கியமான வீதிகளில் ஒன்றுதான் அது. இன்றைய பரபரப்பான உலகின் துடிப்பான வேகம் அந்தத் தெருவிலும் மனித நடமாட்டமாகவும், சைக்கிள்களின் ஓட்டமாகவும், கார் வகையறாக்களின் துரித இயக்கமாகவும் பரிணமித்துக் கொண்டுதானிருந்தது. தெருவின் ஓரிடத்தில் ஒரு நாய் செத்துக் கிடந்தது.@Image@அது கிடந்த இடம் தெருவின் மத்தியுமல்ல;

மேலும்

ஜப்தி - நாறும்பூநாதன்

 நாங்கள் எல்லோரும் தமிழ்ச்செல்வன் வீட்டில் காத்துக்கிடந்தோம். நாடக ஒத்திகைக்கு ஒரே ஒருவர் வர வேண்டும். அவர் கோணங்கி. கீழ ஈரால் பக்கம் கூட்டுறவுத்துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் அப்போது. எப்போதுமே வர இரவு 7 மணி ஆகும். எழுத்தாளர் பூமணியின் வலி என்ற சிறுகதையை தழுவி “பிரச்னை” என்ற நாடகமாக எழுதி நடத்திக்கொண்டிருந்த நேரம்.

மேலும்

மலையாளத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர்..!

''பசங்களா, எல்லாரும் வாங்க, கதை கேட்கலாம்''என்று அழைத்தார் அவர். மளமளவென்று குழந்தைகள் தந்தையைச் சுற்றி அமர்ந்தார்கள். ஆர்வத்தோடு அவருடைய முகத்தையே பார்த்தார்கள்.அவர் கதையைச் சொல்லத் தொடங்கினார். அவர்கள் வாழும் பகுதியில் தினமும் தென்படுகிற மனிதர்களின் கதைதான். ஆனால், அதைக் குழந்தைகள் விரும்பும் வகையில் சிறப்பாகச்

மேலும்

தேவதைக் கதைகளின் தந்தை..!

ஏராளமான தேவதைக் கதைகளை எழுதியதால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர், சிறுமியரின் மனதில் மகிழ்ச்சியை நிரப்பிய எழுத்தாளர் ஹேன்ஸ் க்றிஸ்டியன் ஆண்டர்சன். அந்தச் சிறுவர்கள் எல்லாம் பெரியவர்கள் ஆன பிறகு, அடுத்த தலைமுறைச் சிறுவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் பிடித்த தேவதைக் கதை சொல்லி இவர்.நாவல், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள்

மேலும்