மரண விசாரம், வாழ்வின் பரிசீலனையாக விரிவு கொள்கிறது இப்பிரதியில். இத்தலை முறைக்கான ஒரு விழிப்புணர்வைத் தொற்ற வைக்கும் நம்பிக்கை நூலாகப் பரிமளிக்கிறது சாமந்திப்பூப் போல. இறந்தவர்களுக்கு அதிகமும் போடப்படும் காரணத்தால் சாமந்தி சாவின் பூவாக அடையாளம் காணப்படுகிறது. ஆனால் அது சாமந்தியின் தன்மையில்லையே. எல்லாப் பூவையும் போல அதுவும் மலர்ச்சிதான்… மகிழ்ச்சிதான். சாவும் அப்படித்தான். ஒருகட்டத்தில் நிலையாமையை உணர்த்துவதாக இருந்து விட்டது. நிலையாமையையும் நிலைத்த தன்மையும் மனித அளவில் அர்த்தமற்றவையே. அடிப்படை சார்ந்த விஷயங்களின் பரிசீலனை ஆன்மீகத் தளத்திலேயே விவரிக்கப்படும் பிரச்சினை உண்டு. அல்லது தத்துவப்படுத்தப்படும் அபாயமும் நேரும். இரண்டி லும் விழுந்துவிடாமல் ஒரு குறுநாவலைத் தந்துள்ள ஜெயபிரகாஷ் நல்ல நோக்குநிலையும் கதையாடல் தேர்ச்சியும் பெற்றுள்ளார். சா.தேவதாஸ்
சா
Original price was: ₹120.00.₹90.00Current price is: ₹90.00.

Out of stock