விருந்து
Author: கே.என்.செந்தில்
₹240.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹240.00
தம் ரத்த உறவுகளின் மீது உயிரனைய நேசம் வைத்திருக்கும் எளிய மனிதர்களின் ஈரச் சித்திரம் இத்தொகுப்பின் பெரும்பான்மையான கதைகளில் தீட்டப்பட்டுள்ளது. குறைவான சொற்களில் பாத்திரங்களின் அகநிலைகள் சாத்தியப்படுத்தப்பட்டுள்ள கலைஅமைதி கூடிய இந்தக் கதைகளில் சிறார் உலகின் பரிசுத்தம், பெண்களின் நிகழ் கடந்த காலத் துயர், குடும்ப அமைப்பில் ஆண்களின் புற அக நெருக்கடிகள், முதியவர்களின் நோய்மை படிந்த தனிமை, அதிகாரத்தின் முன் சாதாரணமானவர்கள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுதல், பாலியல் விருப்பு, மீறல் ஆகியவை நம் மனத்தின் சமன் குலையும் விதத்தில் பதிவாகியுள்ளன. இந்தொகுப்பில் ‘முடிவு கதையைக் கடக்க முடியவில்லை. நழுவும் வேட்டியைக் கட்டிக்கொண்டே ஆஸ்பத்திரிக்கு மகளைத் தூக்கிச் செல்லும் தகப்பனைப் பற்றிய இக்கதை கே.என். செந்திலின் கலைஉச்சம் என்று கூறலாம். சக உயிர்களின் இழப்பும் பிரிவும் ஒரு பிரபஞ்சத் துயரமாகிவிடும்போது அச்சமயத்திற்கான மீட்சிபேட்ல தன்னியல்பாகப் புனைவாகியுள்ள இக்கதைகளின் வாசிப்பனுபவம் ஒட்டுமொத்த மானுடத்தின் மீது நம் கரிசனம் குவியும் இடத்திற்கு நம்மை நகர்த்துகிறது. இது இக்கதைகளை மேலும் முக்கியத்துவமானதாக ஆக்குகிறது.
Be the first to review “விருந்து” Cancel reply
Related products
சிறுகதை
சிறுகதை
சிறுகதை
சிறுகதை
சிறுகதை
சிறுகதை
சிறுகதை




Reviews
There are no reviews yet.