மொழிபெயர்ப்பாளராகவே அதிகம் அறியப்பட்ட ஜி. குப்புசாமியின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. தான் ரசித்துப் படித்த, பார்த்த, கேட்ட, வியந்த, கற்றுக்கொண்ட ஆளுமைகளையும் படைப்புகளையும் பற்றிக் குப்புசாமி விரிவாகவும் காத்திரமாகவும் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். உலக இலக்கியம்முதல் உள்ளூர் இலக்கியம்வரை; சார்வாகன்முதல் ஸரமாகோவரை; எஸ்.பி. பாலசுப்பிரமணியம்முதல் ரோஜர் ஃபெடரர்வரை எனப் பல்வேறு படைப்புகளையும் ஆளுமைகளையும் பற்றிய விரிவான சொற்சித்திரங்களைக் கொண்ட நூல் இது. மிகுதியும் அறிவுத் தளத்தில் நிதானமாக இயங்கும் குப்புசாமியின் எழுத்து தேவையான இடங்களின் உணர்ச்சிப் பிரவாகமாகப் பாயவும் செய்கிறது. இந்நூலில் இடம்பெறும் ஆளுமைகள், படைப்புகள் ஆகியவற்றை அறியாதவர்களுக்கு இவை சிறந்த அறிமுகங்களாக அமையும். ஏற்கெனவே அறிந்தவர்களுக்குப் புதிய திறப்புகள் சாத்தியமாகும்.
கண்ணாடிச் சொற்கள்
₹240.00 Original price was: ₹240.00.₹225.00Current price is: ₹225.00.
Category: கட்டுரை
Tags: 2022, NEW BOOKS, இலக்கியம், ஜி.குப்புசாமி
| Edition | First |
|---|---|
| Format | Paperback |
| Isbn | 9789355232540 |
| Language | Tamil |
| Pages | 192 |
Be the first to review “கண்ணாடிச் சொற்கள்” Cancel reply
Related products
சிறார் நூல்கள்
₹80.00
முழுத் தொகுப்பு
₹190.00
Sale!
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹250.00
₹40.00



Reviews
There are no reviews yet.