நான் ஏன் சட்ட விரோதக் குடியேறி ஆனேன்?
₹350.00
| Edition | First |
|---|---|
| Format | Paperback |
| Language | Tamil |
Category: கட்டுரை
Tags: NEW BOOKS, அ.சி விஜிதரன்.
Description
“தான் ஏன் சட்ட விரோத குடியேறி ஆனேன் என்ற இந்த நூலில் மூகாம்களில் தங்கி வாழும் மக்களுடைய துயரத்தை வெளிப்படுத்தக்கூடிய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பள்ளி மாணாவர்களால் எழுதப்பட்டுள்ளன. ‘சுதந்திர தேசம் என்றெண்ணி இங்கு வந்தோம். ஆனா இந்தாட்டிலேயே நீதிக்கும் போராட்டம், நீருக்கும் போராட்டம் என தமிழ் நாட்டின் நிலையை இடித்துரைக்கிறார் ஒரு மாணவி. “அரசு சம்பளம் வாங்க நினைக்கும் அகதிச் சம்பளம் வாங்க வைத்தது’ இச்சமூகம் எனர் சாடுகிறார்.
முனைவர் து.ரவிக்குமார், நாடாளுமன்றஉறுப்பினர், விழுப்புரம் தொகுதி,
பந்தாம் வகுப்பு மானாளி ஆர். ரஞ்சிதாவின், ‘பந்தலில் நிற்கும் வாழைமரம் அடுத்து பழம் தராறு’ என்ற ஆழமான வரிகள் எங்களைப் பயனற்ற வெற்று மனிதர்களாக எவ்வளவு காலம் வைத்திருக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக் கணைகள் தம்மை திக்குமுக்காடச் செய்கின்றன. இந்தத் தொகுப்பில் கட்டுரைகள், எந்தச் சூழலில் அவகாசம் இன்றி இலங்கைத் தமிழர் தமிழகத்துக்கு தஞ்சம் புக நேர்ந்தது? முகாம்களில் அவர்கள் வாழும் வாழ்க்கை எத்தகையது? அவர்களின் குடியுரிமைக் கனவுகளில் உள்ள நியாயங்கள் என்ன? என்ற கேள்விக் கணைகள் சிந்தளையை குடைகின்றன,
கே. பாலகிருஷ்னான், மாநிலச் செயலாளர், சி.பி.ஐ (எம்) . தமிழ்நாடு மாநிலக்குழு.
இதன் சிறப்பு ஒரு சில ஆக்கங்களைத் தவிர்த்துப் பார்த்தால் அளைத்து படைப்புகளையும் ஆக்கி உள்ளோர் மாணவர்களே! அம் மாணவர்கள் ஏக்கத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் பதிவு செய்திருப்பவை புனைவற்றவை; மிகைப்படுத்தப்படாதவை; எதார்த்தமானவை; பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் ஈரநெஞ்சுள்ள எவரையும் கசிய செய்யும் வல்லமை படைத்தவை ஆகும்; படித்துணர்ந்தோரை பரிவான செயல்பாடுகளுக்கு தள்ளச் செய்பவை! நியாயமான கோரிக்கைகளை பெறாமல் தவிக்கும் பெறத் துடிக்கும் இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேற இயன்றதைச் செய்ய முன் வருவதே இந்நூல் தொகுப்புக்கு நாம் காட்டும் உண்மை பாராட்டாகும்.
கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
Reviews (0)
Be the first to review “நான் ஏன் சட்ட விரோதக் குடியேறி ஆனேன்?” Cancel reply
Related products
கட்டுரை
₹420.00
கட்டுரை
₹120.00
கட்டுரை
₹200.00
கட்டுரை
₹60.00
₹100.00
₹80.00




Reviews
There are no reviews yet.