அம்மாவின் சேட்டைகள்
Author: கதைகள் : சாலை செல்வம் சித்திரங்கள் : கார்த்திகாPublisher: குட்டி ஆகாயம்
₹350.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: குட்டி ஆகாயம்
₹350.00
Free shipping for orders above Rs.500 within India.
₹350.00
| Year |
|---|
குழந்தைகளே…
புத்தகங்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது நாங்கள் உங்களிடம் இருந்தே தெரிந்து கொண்ட ரகசியம். ஒரு புத்தகமும் இரண்டு தோழிகளும் உங்களைச் சந்தித்துப் பேச நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். கதைகள் வழியாகவும் சித்திரங்கள் வழியாகவும் எதைத்தான் ஆர்வத்தோடு பேச அவர்கள் காத்திருந்திருப்பார்கள்?
குழந்தைகளே…
நல்லதொரு வாழ்க்கைமுறை உங்களிடம் எப்போதும் இருக்கிறது. அது தினசரி அவ்வளவு மென்மையாக நகர்கிறது. நீங்கள் தொடும் ஒவ்வொரு பொருளிலும் புதுமைகள் நிகழ்ந்தபடி இருக்கிறது. உங்களோடு இருப்பது பெரியவர்களுக்கு அவ்வளவு உற்சாகத்தையும் நல்லுணர்வையும் கொடுக்கிறது.
உங்களைப் பற்றியதும் உங்களைப் போலவே இருப்பதுமான கதைகள் இவை. இந்தக் கதைகள் ஒரு எழுத்தாளருக்குள் மறைந்திருந்த ரகசியமும் பொக்கிஷமும் ஆகும். எல்லோரையும் போல வீட்டிலும் சமூகத்திலும் சாதாரணமாக நடந்தபடியும் பேசியபடியும் பலரையும் கடந்து செல்லும் ஒரு வளர்ந்த மனிதருக்குள் எப்போதும் இனிக்கும் ஓடையாக ஊர்ந்தபடியும், எப்போதும் தூய்மை மாறாத வெண்மேகமாக நகர்ந்தபடியும், எப்போதும் காற்றில் தன் அத்தனை இலைகளையும் அசையவிட்டு புன்னகைத்தபடி இருக்கும் மரமாக நிலைத்தபடியும் இந்தக் கதைகள் இருக்கின்றன.
மிக நல்ல காலத்தில் இந்தப் புத்தகம் உங்களைச் சந்திக்க வருகிறது. கண்ணுக்குத் தென்படும் அத்தனைப் பொருளோடும் பழகிட விரும்பும் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாத அம்மாவிற்காக ஒரு கதையும், குழந்தையின் பேச்சை ஒழுங்கு செய்வதே தனது தலையாய கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிற்காக ஒரு கதையும், நகர வீட்டின் பத்தாவது மாடியில் வசித்தபடி வானத்திலும் மிதக்க முடியாமல்,மண்ணிலும் உலாவ முடியாமல் தவிக்கும் குழந்தைக்காக ஒரு கதையும், நிறைய குழந்தைகளுக்கு அருகில் இருந்தும் குழந்தைகளோடு என்ன செய்வதென்று அறியாத மனிதருக்காக ஒரு கதையும், கிணற்று நீரையும், பனங்காடை, பஞ்சுருட்டான் பறவைகளையும், பனைமரங்களை ஒட்டிச்செல்லும் சகதிப் பாதையையும், குளத்தங்கரை ஆலமரத்தடியில் கொட்டிக்கிடக்கும் ஈரக்காற்றையும் இழந்துவிட்டு தொட்டிச்செடிக்கு அருகில் வாழ்ந்துவரும் முதியவருக்காக ஒரு கதையும், கதைகளை எந்தக் காரணமும் இன்றி நேசிக்க விரும்பும் இலக்கியக்காரருக்காகப் பலப்பலக் கதைகளையும் சேர்த்துக்கொண்டு மிக நல்ல காலத்தில் இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.
இந்தக் கதைகளை வாசிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் தேவைப்படும் இதில் உள்ள ஒவ்வொரு ஓவியத்தையும் பார்த்துப்பார்த்து கடந்து செல்ல. குழந்தைகளின் நுண்ணுணர்வின்மேல் ஈர்ப்பு கொண்டு மிக நிதானமாக வரையப்பட்ட ஓவியங்கள் இவை. வாசிக்கத் தெரியாதவர்களோ, மொழி தெரியாதவர்களோகூட இந்தப் புத்தகத்தைத் தன்னோடு நெருக்கமாக வைத்துக்கொள்ள முடியும். ஓவியங்கள்மேல் கவனம் உள்ள குழந்தைகள் இதில் உள்ள ஓவியங்களின் வழியாக புதுவிதமான கதைகளைத் தேடிச்செல்ல முடியும்.
சிறார் புத்தகம் என்பதற்கான வரையறையாக, அது ஒரு குழந்தையைப் போலவே முற்றிலும் சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்பதே மனதில் தோன்றுகிறது. ஒரு சிறார் புத்தகம் எல்லா வயதினருக்குள்ளும் பொருட்படுத்தப்படாமல் ஒரு குழந்தை இருப்பதை தொட்டுப்பேசி வயதைக் கடந்து கதையாட வேண்டும். குழந்தைகளின் இயல்பின் ஆழத்தில் ஊற்றெடுக்கும் பாவனைகளை கண்களாலும் இதயத்தாலும் அரவணைத்து மொழியாக்கி ஒரு சிறார் புத்தகம் நிலம் கடந்து கதையாட வேண்டும். குழந்தைகளை அணுகத் திணறித் தவிப்பவர்களுக்கான நித்தியமானதொரு பதிலை தன் கதைகளுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு காலம் கடந்து கதையாட வேண்டும்.
ஒரு குழந்தையின் வழியாக, ஒரு குழந்தையைப் பற்றி, ஒரு குழந்தையைப் போலவே, குழந்தையின் மொழி கொண்டு தனக்குள் அலைந்து திரிந்தபடி இருந்த குழந்தையை கதைகளாகப் பரிணமிக்கச் செய்ததின் வழி தமிழில் சிறார் இலக்கியம் துவங்க ஒரு அடர்த்தியான புள்ளியை தொட்டுக் காட்டுகிறது இந்த சிறார் மனவுலக நாவல்.
Be the first to review “அம்மாவின் சேட்டைகள்” Cancel reply
Related products
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்





Reviews
There are no reviews yet.