பல நூற்றாண்டுகளாக பெண் ஒடுக்கப்பட்டு எவ்வித உரிமைகளற்று இருந்தாள். பல நூற்றாண்டுகளாக அவள் ஆணின் வெறும் ஒரு இணைப்பாக, அவனுடைய நிழலாகத்தான் இருந்தாள். அவள் தனது கணவனின் விருப்பத்திற்கு அடிபணிந்திருக்கும் வரை, தன் சொந்த சக்தியின்மையை, தன் சொந்த வீடு மற்றும் குடும்ப அடிமைத்தனத்தை பணிவுடன் தாங்கிக் கொண்டிருக்கும் வரை, கணவன் அவனுடைய மனைவிக்கு தேவையானதை வழங்கினான்.
சட்டத்தின்படி, ஒரு பெண் ஒரு ஆணுக்கு சமமான உரிமைகள் பெற்றவள், ஆனால் வாழ்வு இன்னும் பெண்களை விடுவித்திருக்கவில்லை. பெண் தொழிலாளி, விவசாயப் பெண் ஆகியோர் இன்னும் வீட்டின் பிடியில்தான் இருக்கிறார்கள், இன்னும் தங்கள் சொந்த நிலத்தில் ஒரு அடிமையாக இருக்கிறார்கள். தற்போது தொழிலாளர்களின் பணியென்பது வாழ்வை சரிசெய்து பெண்களின் தோள்களிலிருந்து குழந்தைப் பராமரிப்பு என்ற சுமையை விடுவிப்பதேயாகும். அப்போதுதான் வீட்டுப்பணிகளை சுலபமாக்க முடியும். உழைக்கும் வர்க்கம் இந்த துறைகளில் பெண்களின் விடுதலையில் ஆர்வமாக உள்ளது.




Reviews
There are no reviews yet.