கனவின் பாதை
Author: மணாPublisher: PEN BIRD PUBLICATION
₹225.00 Original price was: ₹225.00.₹214.00Current price is: ₹214.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: PEN BIRD PUBLICATION
₹225.00 Original price was: ₹225.00.₹214.00Current price is: ₹214.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹225.00 Original price was: ₹225.00.₹214.00Current price is: ₹214.00.
குடியரசுத் தலைவராவதற்கு முன்பு சென்னையில் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல்கலாமைச் சந்தித்தபோது ராமநாதபுரத் தமிழ் உச்சரிப்புடன் தன் வாழ்க்கையை அவர் விவரித்த விதம்; பிறந்ததுமே கடும் நெருக்கடியை எதிர்கொண்டதைக் கண் நிரம்பிப் பளபளத்தபடி, குரல் தடுமாறியபடி பேசிய மனோரமாவின் நிஜ முகம்; ஜோதிடர்கள் தன்னுடைய வாழ்க்கை இப்படித்தானிருக்கும் என்று கிரக சாஸ்திரப்படி சொன்னாலும், மெல்லிய இறகால் வருடுகிற மாதிரியான இளகிய குரலுடன் சென்னைக்கு வந்து தன்னுடைய வாழ்க்கையின் திசையைத் தானே தீர்மானித்துக்கொண்ட பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிக் காண்பித்த பாடல்கள்; முந்திரிக் காடு சூழ்ந்த பகுதியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து அவமானங்கள் பிடரியில் திரும்பத் திரும்ப வலுவாக அடித்தாலும் அதை மீறி ஜெயித்ததைச் சொல்கையில் தங்கர்பச்சானின் பேச்சில் இருந்த ஆவேசம்; பெண்மை குழைந்த முகத்துடன் பிறந்து சமூகப் புறக்கணிப்பை மீறித் திமிறித் துடித்துப் பரதத்தின் மூலம் தன் அழுத்தமான முகத்தைக் காண்பித்துக் கொண்ட நர்த்தகி நடராஜ் ஆடிக் காண்பித்த சில நடன அசைவுகள்; இப்படி நம்பிக்கையை இழக்காமல் இவர்கள் போராடி ஓர் இடத்திற்கு வந்து சேர்ந்தது குறித்துப் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் ரொம்பவும் பசுமையானவை.
இதிலிருந்து ஏதாவது நம்பிக்கையான ஒரு வரி படிக்கும்போது பார்வையிலிருந்து ஒரு திசு மாதிரி நழுவி உட்புகுந்து மேலும் செயலாற்றத் தூண்டுதலாக இருந்தாலே போதும். அதுவே இந்த நூலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இருக்கும்.
Be the first to review “கனவின் பாதை” Cancel reply
Related products
கட்டுரை
கட்டுரை




Reviews
There are no reviews yet.